Skip to main content

Posts

Showing posts from August, 2026

எதிர்பார்ப்புகளற்ற அன்பு

 31/08/2026 திங்கட்கிழமை  03.13pm * எதிர்பார்ப்புகளற்ற அன்பு*   .   அன்பு என்பது எதிர்பார்ப்புகளற்றது என்றுதான் அன்பு நிறைந்த உள்ளம் நினைக்கும்… எதையும் எதிர்பாராமல் கொடுப்பதுதான் அன்பென்றால், அன்பிற்குரியவள் கொடுத்த அன்புக்கு ஒரு பதிலும் வேண்டாம்… ஆனால் என் அன்பானவர், ததும்பும் அன்பினளை நினைக்க வேண்டும், அன்பரசி மீது அக்கறை கொள்ள வேண்டும், உள்ளன்புடன் இருப்பவள் இருக்கிறாளா என்று ஒருமுறையேனும் அவளுக்கானவராய் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது மட்டும் எப்படி எதிர்பார்ப்பாகிவிடும்? அவர்களுக்காக வாழத் தயாராக இருக்கும் இந்த மனம், ஒருநாள் “ஒருத்திக்காகவும் கொஞ்சம் வாழுங்கள்…” என்று கேட்கிறது. அது பேராசையல்ல… அது அன்பைப் பெற்றுக்கொள்ளும் ஆசையுமல்ல… அன்பினள் கொடுத்த அன்பு அவரின் உளமதில் ஒரு சிறு இடமாவது பெற்றிருக்கிறதா என்றறியத் துடிக்கும் ஒரு அன்பு நெஞ்சத்தின் ஏக்கம். அன்பு எதையும் கேட்காமல் இருக்கலாம்… ஆனால் அன்பானவரிடம் அன்பையே எதிர்பார்ப்பது அளவிற்கு மீறியதா? ஒருவேளை… அன்புக்கு எதிர்பார்ப்பு இல்லை; ஆனால் அன்பானவரிடமிருந்து அன்பு கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம...

மெக்சிகோ டூ மதுரை: நம்ம ஊர் சர்க்கரை பூசணிக்காயின் வியப்பூட்டும் வரலாறு! 🎃

 தமிழ்நாட்டில் எந்த ஒரு  நற்காரியமாக இருந்தாலும், அமாவாசை போன்ற  நாட்களாக இருந்தாலும் சரி...  அங்கே சுவையான கூட்டு, சாம்பார் செய்ய மஞ்சள் நிற சர்க்கரை பூசணிக்காய் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். (திருஷ்டி கழிக்க நாம் வெள்ளை பூசணியைப் பயன்படுத்துவது போல, சுப சமையலுக்கு இந்த மஞ்சள் பூசணி ரொம்பவே முக்கியம்). இன்று நம் வீட்டு சமையலறைகளிலும், சுபநிகழ்வுகளிலும் மரபு சார்ந்த காயாக வீற்றிருக்கும் இந்த பூசணிக்காய், உண்மையில் நம் மண்ணைச் சேர்ந்தது அல்ல என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது எப்படி கடல் கடந்து நம் ஊருக்கு வந்தது? அதன் சுவாரசியமான பின்னணியைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.. பூசணியின் பெயர்க்காரணம் பூசணிக்காயைக் குறிக்கும் 'Pumpkin' என்ற ஆங்கில வார்த்தை, "பெரிய தர்பூசணி" என்று பொருள்படும் 'Pepon' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. இது பிரெஞ்சு மொழியில் 'Pompon' என்றும், பின்னர் ஆங்கிலத்தில் 'Pumpion' என்றும் மாறி, இறுதியில் 'Pumpkin' என உருவெடுத்தது. ஆரம்பகால வரலாறு  (மெக்சிகோ டூ அமெரிக்கா) தொல்பொருள் சான்றுகளின்படி, பூச...

தமிழரின் பண்பாட்டு உண்மையும்! வடநாட்டு கயிறு கட்டும் பொய்மையும்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை  11.58   ரக்ஷா பந்தன் — தமிழர்களுக்குத் தேவையா? தமிழர்களின் வாயில் நுழையாத   வீட்டு வாயில்கூட நுழைந்து விடக் கூடாத பெயரும் பண்பாடும்  தமிழினத்திற்கு தேவையா? நாகரிகம் என்ற சொல்லுக்கு உலக நாடுகள் அகராதி தேடிக் கொண்டிருந்த காலத்திலேயே, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலக மக்களைத் தன் தொப்புள்கொடி உறவுகளாக அறிவித்த பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு. உறவுகளுக்கு இலக்கணமும், ஒழுக்கத்திற்கு எல்லையும் வகுத்து வாழ்ந்த பண்பாடு நம் தமிழர் பண்பாடு. பெண்ணை மதிப்பதும், உறவுகளைப் போற்றுவதும், மனிதர்களை மனிதர்களாக மதிப்பதும் தமிழர்களுக்கு நேற்று வந்த கருத்துகள் அல்ல. அவை நம் இலக்கியங்களிலும், வாழ்வியலிலும், சமூக நினைவிலும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பதிவாகி வந்துள்ள பண்புகள். ஆனால், சமீபகாலமாக இங்குள்ள சில ஊடகங்களும், விளம்பர நிறுவனங்களும் வடஇந்தியப் பண்பாட்டில் நிலவும் ‘ரக்ஷா பந்தன்’ என்ற சடங்கை, ஏதோ உலகளாவிய பாசத்தின் அடையாளம் போலவும், சகோதரன்–சகோதரி உறவை உறுதிப்படுத்துவதற்கான அவசியமான விழா போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. ஒரு கேள்வியை நாம் கேட்க வே...

ஸ்ரீபெரும்புதூர் தொழில் புரட்சியின் விதை: செயின்ட் கோபைன் நிறுவனத்தை கலைஞர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த வரலாற்றுப் பின்னணி!

 நாள்: 25 ஆகஸ்ட் 2026 (செவ்வாய்) நேரம்: பிற்பகல் 3:31 PM தமிழகத்தின் தொழில்துறை வரலாற்றில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. இன்று உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கும் இந்தத் தொழிற்பேட்டையின் அஸ்திவாரம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தீர்க்கதரிசனமான அரசியல் தொலைநோக்குப் பார்வையால் போடப்பட்டது. 300 ஆண்டுகால பிரெஞ்சுப் பாரம்பரியம் பிரான்ஸ் நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு, 1665-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'செயின்ட் கோபைன்' (Saint-Gobain) நிறுவனம், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவியப் பாரம்பரியம் கொண்டது. உலகிலேயே கண்ணாடித்தயாரிப்பில் முதன்மை வகிக்கும் இந்த ஐரோப்பியப் பெரு நிறுவனம், 1990-களின் இறுதியில் இந்தியாவில் தனது பிரம்மாண்டமான முதல் உற்பத்தி ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டது.   மாநிலங்களுக்கு இடையே நிலவிய கடுமையான போட்டி இந்தியாவில் பொருளாதாரத் தாராளமயமாக்கல் தொடங்கிய காலகட்டம் அது. செயின்ட் கோபைன் போன்ற ஒரு உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்குள் இழுக்க குஜராத், மகாராஷ்டிர...

வீட்டுக்கு வந்த திரையரங்கம்: VCR டெக் வரலாறு முதல் ஏக்நாத் வீடியோ வரை!

 நாள்: 24 ஆகஸ்ட் 2026 (திங்கள்) நேரம்: இரவு 10:30 PM இன்றைக்கு கையடக்கச் செல்போன் திரையில் சொடக்கு போடும் நேரத்தில் சினிமா பார்க்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், 80-களிலும் 90-களிலும் 'விசிஆர் டெக்' (VCR Deck) வாடகைக்கு எடுத்து வந்து, வீட்டில் திரைகட்டி, ஊரே ஒன்று கூடிப் படம் பார்த்த அனுபவம் ஒரு மறக்க முடியாத வசந்த காலம். அந்த டெக் தொழில்நுட்பம் எங்கு பிறந்த கதை தெரியுமா? டெக் பிறந்த வரலாறு (1969 - 1976) வீடுகளுக்கான வீடியோ டெக் தொழில்நுட்பத்திற்கு முதன்முதலில் வித்திட்டது ஐரோப்பாவைச் சேர்ந்த பிலிப்ஸ் (Philips) நிறுவனம் தான். 1969-ஆம் ஆண்டு பிலிப்ஸ் நிறுவனம் தான் 'VCR' எனும் முதல் வீட்டு வீடியோ வடிவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர், ஜப்பானைச் சேர்ந்த சோனி (Sony) நிறுவனம் 1975-இல் 'பீட்டாமாக்ஸ்' (Betamax) எனும் டெக்குகளைக் கொண்டு வந்தது. ஆனால், 1976-இல் ஜப்பானின் ஜே.வி.சி (JVC) நிறுவனம் அறிமுகப்படுத்திய 'விஹெச்எஸ்' (VHS - Video Home System) எனும் கேசட் வடிவம்தான் உலக அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, அனைவரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்தது. இந்...

கடம்பவனக் கடவுளின் ஊரும்/ பேரும் மாற்றப்பட்ட வரலாறு

 # கடம்பவனம் #சம்மட்டிபுரம் #மருதூர் #நான்மாடக்கூடல் போன்ற பழம்பெருமையான தமிழ்ப்பெயர்களைக் கொண்டு ஊர் தான் தற்போதைய #மதுரைமாநகர் மருத மரங்கள் அடர்ந்த மருதூர் என்பதுதான் பின்னாளில் ஆரியர்களால் மதுரை என்றானது  இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானோ முன்னைப் பழம்பொருள்.  அதாவது கடம்பவன நாதர் என்ற சொக்கநாதப் பெருமான் என்பவர் தான் காடுகளடர்ந்த இவ்வூரில் குடி புகுந்தவர்; தனித்ததோர் தெய்வம்;  இந்த கடம்பவன நாதாரால் தான் ஊரும்/ பேரும் உருவாயிற்று.. அப்பொழுது அம்மன் என்பதே இல்லை  எனவே இது  #சொக்கநாதப் பெருமான் கோயில் மட்டும் தான்  பின்னர் அங்கற்கண்ணி என்ற அம்மன் வழிபாடு எப்பொழுது திணிக்கப்பட்டது? தனிப் பெரும் சைவ நாடான கடம்பவன மருதூரில்  அம்மன் வழிபாடு  நாயக்கர்கள் மதுரையை கைப்பற்றிய போது அவர்களால்  கொண்டவரப்பட்ட இடைக்கால வழிபாட்டு முறையாகும்‌. கி.பி. 16 - 17-ஆம் நூற்றாண்டு): நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்தான், குறிப்பாக திருமலை நாயக்கர் காலத்தில், மதுரையில் அம்மன் வழிபாடு பெருமளவில் முன்னிறுத்தப்பட்டது. சிவபெருமானுக்கு நிகராக அல்லது அவரை விடவும் ...

வைராக்கியமான போராட்டம்: கோஹினூர் முதல் பெல்ஜியம் வைரம் வரை!

  வைரம்... மனிதர்களைத் தன் வசீகரத்தால் கட்டிப்போடும் ஒரு விசித்திரக் கல். "வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்" என்பார்கள். ஆனால், அந்த வைரத்திற்குப் பின்னால் இருக்கும் வரலாறும், அதை அடைவதற்காக மனிதர்கள் நடத்திய போராட்டங்களும் சாமானியமானவை அல்ல. உலகையே உலுக்கிய கோஹினூர் வைரத்தின் வைராக்கியமான போராட்டம் முதல், இன்று நம்மூர் பெண்கள் மூக்குத்தியாக அணியும் பெல்ஜியம் வைரம் வரையிலான ஒரு சுவாரசியமான பயணம் இது. பாரசீக மொழியில் 'கோஹினூர்' என்றால் 'ஒளியின் மலை' என்று பொருள். இந்த வரலாற்று நாயகன் பிறந்தது நம் இந்திய மண்ணில்தான். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில், காகதீய வம்ச ஆட்சிக் காலத்தில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் எடை சுமார் 793 கேரட் ஆக இருந்தது. பின்னாள்களில் பட்டை தீட்டப்பட்டு இதன் எடை 105 கேரட்டாகக் குறைந்தது. கோஹினூர் வைரம் சாதாரணமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறவில்லை. பல போர்கள், இரத்தக் களரிகள் மற்றும் துரோகங்களைக் கடந்துதான் கைமாறியது. காகதீய மன்னர்களிடமிருந்து அலாவுதீன் கில்ஜி, முகலாயப் பேரரசர் ஷாஜ...

இந்தியாவிற்கே முதல் விடுதலைப் போராட்ட வீரன்: சிப்பாய் கலகத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை அலறவைத்த கான்சாஹிப் மருதநாயகம்!

  வெள்ளையர் ஆட்சியில் மதுரையின் ஆளுநரான ஒரே தமிழன்! ஆங்கிலேயர்களால் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதியின் ஆளுநராக (Governor) நியமிக்கப்பட்ட ஒரே தமிழன் மருதநாயகம் மட்டுமே! தளபதியிலிருந்து சுதந்திரப் போராளியாக: கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்த வீரம்! மதுரை நகரோடு நிலைத்த பெயர்: தளவாய் அக்ரகாரமும் கான்சாமேட்டு தெருவும்! போர்க்களத்தில் வெல்ல முடியாமல் சதியால் கைதான சோகம்! தூக்கிலிட்ட பிறகும் அஞ்சிய ஆங்கிலேயர்: உடலைத் துண்டு துண்டாக வீசிய வன்ம ம்!   இந்திய நாட்டின் விடுதலை நாளில், தென்னகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை முதன்முதலாக உலுக்கி எடுத்த மாவீரர் கான்சாஹிப் மருதநாயகம் பிள்ளையை நினைவுகூர்வது நமக்குக் பெருமையளிப்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்த இவர், தன் வாழ்வின் தொடக்கத்தில் பிரெஞ்சுப் படைகளிலும், பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையிலும் சுபேதாராகப் பணியாற்றினார். போர்க்களத்தில் இவரது ஒப்பற்ற வீரத்தையும், நுட்பமான போர்த்தந்திரங்களையும் கண்ட ஆங்கிலேயர்கள், இவருக்கு 'கான்சாஹிப்' என்ற உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி...

ஆயிரம் வைசியர் பள்ளிக்கூடம்: பெயர்க் காரணமும் வரலாற்று விவாதங்களும்!

  நமது தமிழ்நாட்டில்  தென் தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக மதுரை போன்ற ஊர்களில் "ஆயிரவைசியர் பள்ளிக்கூடம்" அல்லது "ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி" என்ற பெயரிலான கல்வி நிறுவனங்களை நாம் பார்த்திருப்போம். ஒரு பள்ளிக்கு ஏன் இப்படியொரு வடமொழி கலந்த பெயர் வந்தது? இதன் பின்னணியில் உள்ள சமூக, வரலாற்றுப் பின்னணி மற்றும் முற்போக்கு விமர்சனங்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாக ஆய்தல் பலரின் ஐயங்களைப் போக்கும். முற்காலத்தில் அரசு பள்ளிகள் இல்லாத அல்லது மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், ஆயிரவைசியர் என்று அழைக்கப்படும் பாரம்பரியத் தமிழ் வணிகச் சமூகத்தினரால் (குறிப்பாக பேரி செட்டியார் மற்றும் அதன் உட்பிரிவுகள்) தங்களது சொந்தப் பணத்தில் நிலம் வாங்கி இப்பள்ளிகள் நிறுவப்பட்டன. தங்களது கொடையையும், சமுதாயப் பங்களிப்பையும் அடையாளப்படுத்தும் நோக்கில் இப்பள்ளிகளுக்கு "ஆயிரவைசியர் பள்ளி" என்று பெயரிட்டனர். இதில் உள்ள "ஆயிரம்" என்ற சொல், முற்காலத்தில் இந்த வணிகக் குழுவில் இருந்த தலைவர்கள், குடிகள் அல்லது அவர்கள் நிர்வகித்த வணிகக் கிராமங்களின் எண்ணிக்கையைக் குறித்து உருவான மரபுப...

சதுக்க பூதங்கள்

  நற்றமிழ் வணக்கம் 🙏🏻  சதுக்க பூதங்கள் என்பவை பண்டைய தமிழ்நாட்டில் அறத்தைக் காக்கும் காவல் தெய்வங்களாக வணங்கப்பட்ட பூதங்கள்  இந்த சதுக்க பூதங்களின்  இருப்பிடங்களாக இருந்தவை விசாலமான வீதிகளும்  நாற்சந்திகள் கூடும் இடங்களுமேயாம். அறம் பிறழ்ந்து நடப்போரை அந்த பூதங்கள் அவ்வப்போதே அவ்விடத்திலேயே தண்டித்து விடும். பொய்யான துறவிகள்,  பிறருக்கு தீங்கிழைத்தோர், பிறன் மனைவியைக் கவர்ந்தோர்,  சூதாட்டத்தில் ஈடுபடுவோர்,  அடுத்தவர்களின் பொருளைக் கொள்ளையடிப்போர்,  பொய் சாட்சி சொல்லுவோர்  பெண்களை துன்புறுத்துவோர்  இவர்கள்தான் அறம்பிழந்து நடப்பவர்கள், அதாவது தர்மத்திற்கு, சத்தியத்திற்கு புறம்பாக நடப்பவர்கள். இப்படிப்பட்டோரை அந்த இடத்திலேயே பூதங்கள் கொன்று விடும். ( Spot punishment ) ஒவ்வொரு நாற்சந்தியிலும் இந்த பூதங்கள் காணப்படும், மக்களை கண்காணித்துக் கொண்டேயிருக்கும். இந்த பூதங்களைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில்  கோவலனும் கண்ணகியும் புகார் நகரத்தில் வாழ்ந்தபோது , ஒரு பத்தினிப் பெண்ணை...

காக்கையின் அறிவியல் உண்மையும்... தமிழர்களின் வரலாற்று உண்மையும்!

  மனிதர்களின் பார்வையில் காக்கைகளின் சில செயல்கள் கொடூரமாகத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் வலுவான அறிவியல் காரணங்கள் உள்ளன. பறவைகளிலேயே காக்கைகளுக்கு நினைவாற்றல் மிக அதிகம்.  வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காக்கைகள் தங்களுக்குக் கெடுதல் செய்யும் மனிதர்களின் முகங்களை ஐந்து ஆண்டுகள் வரை துல்லியமாக நினைவில் வைத்திருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எப்போதாவது ஒரு காக்கையைக் கல்லால் அடித்திருந்தால், அது அந்த முகத்தை மனதில் பதித்துக்கொண்டு, அடுத்த முறை பார்க்கும் போது தலையிலேயே குறி வைத்துக் கொடூரமாகக் கொத்தும் இயல்புடையது. அதேபோல, காக்கைகள் சாதுவான பறவைகள் அல்ல; அவை அனைத்துண்ணி வாழ்க்கை முறையைக் கொண்டவை. மரத்தில் இருக்கும் அணில் குஞ்சுகள், சிறிய குருவிகள், புறாவின் முட்டைகள் ஆகியவற்றை வேட்டையாடித் தின்னும். இது காக்கையின் குரூர குணம் அல்ல, காட்டில் வாழும் புலி மான் குட்டியை வேட்டையாடுவது போன்ற அதன் உயிர்பிழைப்பு உத்தி மட்டுமே. மேலும், கழுகு, பருந்து, ஆந்தை அல்லது பூனைகளால் ஆபத்து என்று தெரிந்தால், ஒரு காக்கை கத்தும் சத்தத்தைக் கேட்டு அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்க...

தட்சிணாமூர்த்தியின் உண்மை தமிழ்ப் பெயர்: தென்முகக் கடவுள் மொழிபெயர்ப்பா?

நற்றமிழ் வணக்கம் 🙏🏻  பெயரின் பின்னணியும் மொழிபெயர்ப்பும் நாம் இன்று பரவலாக வியாழக்கிழமை தோறும் வழிபடும் தட்சிணாமூர்த்தி என்ற சொல் வடமொழியாகும்.  'தட்சிணம்' என்பதற்கு தெற்கு என்று பொருளாகும். அதன் காரணமாகவே பிற்காலத்தில் இவரை 'தென்முகக் கடவுள்' என்று தமிழில் மொழிபெயர்த்து அழைக்கத் தொடங்கினர்.  ஆனால், இது நேரடி மொழிபெயர்ப்பே தவிர, (சங்க) கழககாலத் தமிழர்கள் அவருக்குச் சூட்டிய மெய்யான தமிழ்ப் பெயர் அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை. மொழிபெயர்ப்புகளைத் தாண்டி நம் பாட்டன் முப்பாட்டன் காலத்து இலக்கியங்களில் தேடிப் பார்த்தால், மிக ஆழமான பண்டையகுடித் தமிழ்ப் பெயர்கள் நமக்குக் கிடைக்கின்றன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூறு, கலித்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கிய நூல்களில் இவரைப் பற்றிய தூய தமிழ்ப் பெயர்கள் பயின்று வந்துள்ளன. காடுகளிலும் இயற்கையோடும் வாழ்ந்த நம் முன்னோர்கள், பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து அறம் உரைத்த இறைவனை 'ஆலமர் செல்வன்', 'ஆலமர் கடவுள்' மற்றும் 'ஆலமர் இறையனார்' என்று தூய தமிழில் போற்றி வழிபட்டனர். வார நா...

🌾 ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்! 🌊

  நறுந்தமிழ் வணக்கங்கள்! 🙏🏻 ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு, தமிழர்கள் காலங்காலமாகக் கொண்டாடி வரும் தனித்துவமிக்க திருவிழாவாகும். இது இயற்கையையும், நீரையும், வேளாண்மையையும் போற்றும் தமிழர் விழா. மழை, ஆறு, பாசனம், உழவு ஆகியவற்றின் உறவை நன்கு உணர்ந்த தமிழர்கள், நீரே வாழ்வின் ஆதாரம் என்பதை உணர்த்தும் வகையில் ஆடிப்பெருக்கைக் கொண்டாடினர். தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவையும், இயற்கைக்கு அவர்கள் செலுத்திய நன்றியுணர்வையும் பறைசாற்றும் பெருவிழாவாக ஆடிப்பெருக்கு விளங்குகிறது. அத்தகைய தமிழர் மரபை நினைவூட்டும் வகையில், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காவிரியைப் போற்றிப் பாடுகிறார்: மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, மணிப்பூ ஆடை அதுபோர்த்துக், கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்; வாழி, காவேரி! அதனைத் தொடர்ந்து அவர் பாடுகிறார்: நடந்த எல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்; வாழி, காவேரி! விளக்கம் இளங்கோவடிகள், காவிரியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, சோழ வேந்தனை அவளின் கணவனாக உருவகப்படுத்துகிறார்.  இங்கு குறிப்பிட்ட எந்தச் சோழ மன்னனின் பெயரும் கூறப்படவில்லை....

நாம் எந்த கடவுளை கும்பிட்டாலும் சிவன் அருள் செய்வாரா? - சிவஞான சித்தியார் ரகசியம்!

  நறுந்தமிழ் வணக்கங்கள்! 🙏🏻 சைவ சித்தாந்தத்தின் தலைசிறந்த  நூல்களுள் ஒன்றான சிவஞான சித்தியாரில் இருந்து, இறைவன் எங்கும் நிறைந்து அருள் செய்யும் தன்மையை விளக்கும் ஒரு அருமையான பாடல் மற்றும் அதன் விளக்கம்: பாடல்: யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார் மற்ற தெய்வங்கள் வேதனைப்படும் பிறக்கும் இறக்கும் மேற் வினையுஞ் செய்யும் ஆதலால் அவையிலாதான் அறிந்து அருள் செய்வ னன்றே!! — சிவஞான சித்தியார் பாடலின் எளிய விளக்கம்: கடவுள் என நினைத்து நீங்கள் யாரை வணங்கினாலும் சரி... அது பெருமாளோ, முருகனோ, பிள்ளையாரோ, காளியோ — இப்படி யாராக இருந்தாலும்,  அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் அருள் வழங்குகிறார்களோ இல்லையோ... உங்களின் உண்மையான நம்பிக்கையை வீண்போகாமல், அந்தந்த தெய்வத்தின் உருவிலேயே அம்மையை பாதி பாகத்தில் கொண்ட சிவபெருமான் தான் வந்து அருள் புரிகிறார். ஏனைய தெய்வங்களெல்லாம் தோன்றும், மறையும்; பிறப்பு, இறப்பு மற்றும் வேதனைப்படும் இயல்புடையவை. இதற்கெல்லாம் மேலாக அவை வினையையும் செய்யும். ஆனால், மேற்கண்ட எந்தக்  பண்புகளுமே இல்லாதவன், இதற்கு அப்...