31-08-2026 | 3:02 PM * எதிர்பார்ப்புகளற்ற அன்பு * அன்பு என்பது எதிர்பார்ப்புகளற்றது என்றுதான் அன்பு நிறைந்த உள்ளம் நினைக்கும்… எதையும் எதிர்பாராமல் கொடுப்பதுதான் அன்பென்றால், அன்பிற்குரியவள் கொடுத்த அன்புக்கு ஒரு பதிலும் வேண்டாம்… ஆனால் என் அன்பானவர், ததும்பும் அன்பினளை நினைக்க வேண்டும், அன்பரசி மீது அக்கறை கொள்ள வேண்டும், உள்ளன்புடன் இருப்பவள் இருக்கிறாளா என்று ஒருமுறையேனும் அவளுக்கானவராய் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது மட்டும் எப்படி எதிர்பார்ப்பாகிவிடும்? அவர்களுக்காக வாழத் தயாராக இருக்கும் இந்த மனம், ஒருநாள் “ஒருத்திக்காகவும் கொஞ்சம் வாழுங்கள்…” என்று கேட்கிறது. அது பேராசையல்ல… அது அன்பைப் பெற்றுக்கொள்ளும் ஆசையுமல்ல… அன்பினள் கொடுத்த அன்பு அவரின் உளமதில் ஒரு சிறு இடமாவது பெற்றிருக்கிறதா என்றறியத் துடிக்கும் ஒரு அன்பு நெஞ்சத்தின் ஏக்கம். அன்பு எதையும் கேட்காமல் இருக்கலாம்… ஆனால் அன்பானவரிடம் அன்பையே எதிர்பார்ப்பது அளவிற்கு மீறியதா? ஒருவேளை… அன்புக்கு எதிர்பார்ப்பு இல்லை; ஆனால் அன்பானவரிடமிருந்து அன்பு கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் இருக்கும்… அந்த ஏக்கத்திற்க...
Porkodi Nangai - A Tamil Writer weaving thoughts with classical Tamil literary grace and grammatical beauty. Poetry, Stories and Essays that breathe Tamil.