என்னைப் பற்றியும் என் எழுத்துக்களைப் பற்றியும்🙏
அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்!
என் பெயர் பொற்கொடி நங்கை. தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் ஆன்மீகம் சார்ந்த எனது தேடல்களையும் சிந்தனைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த வலைப்பதிவைத் தொடங்கியுள்ளேன்.
ஏற்கனவே 'கொற்றவையாளுக்கு நற்றமிழ் பாயிரம்' என்ற தலைப்பில், கொற்றவையின் ஆயிரத்தெட்டு போற்றிகளைத் தொகுத்து எழுதிய நூல் வானதி பதிப்பகத்தின் வழியே நூலாக வெளிவந்து அன்பர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது நாயன்மார்களின் பாடல்களுக்கான எளிய விளக்கவுரை அடங்கிய புதிய நூல் ஒன்றின் பணிகளும் நிறைவுற்று, விரைவில் புத்தகமாக வெளிவரவுள்ளது.
இனிவரும் நாட்களில், எனது ஆய்வுகள், வரலாற்றுச் சிந்தனைகள் மற்றும் தமிழ் சார்ந்த கட்டுரைகளை இந்த பிளாக்கில் தொடர்ந்து பதிவிட உள்ளேன். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
"தமிழை நேசிப்பவர்கள் இந்த வலைப்பதிவை தொடர்ந்து படித்து, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்."
நன்றியுடன்,
M.Porkodi Nangai 🌿
Tamil writer & Author

Comments
Post a Comment