நறுந்தமிழ் வணக்கங்கள்!🙏🏻
நமது சிறுதெய்வ வழிபாடுகளுக்குப்
பின்னாலும், சிற்றூர்களில் பேச்சியம்மன் வழிபாட்டிற்குப் பின்னாலும் ஆழமான தமிழ் மரபும் வரலாறும் ஒளிந்திருக்கிறது.
பேச்சியம்மன் பெயர் காரணம்:
'பேச்சி' என்றால் 'பேச்சு', 'சொல்வன்மை' அல்லது 'வாக்கு பலம் என்று பொருள். நாவன்மை, அறிவாற்றல் மற்றும் எழுத்தாற்றலைத் தரும் தாயாகவே நம் முன்னோர்கள் பேச்சியம்மனை வழிபட்டனர். 'பேச்சி அம்மன் என்றால் பெரிய அம்மன்' என்று சிலர் சொல்வதற்கெல்லாம் எந்தவிதக் வரலாற்றுச் சான்றுகளும் இல்லை.
செவிவழி கதைகளும் உண்மை நிலையும்:
இன்று பேச்சியம்மனை நாக்கை நீட்டியபடி பயங்கரமான தோற்றத்திலும், குழந்தை வரம் தொடர்பான பல கதைகளுடனும் சித்தரிக்கிறார்கள்.
ஆனால், இவையெல்லாம் காலப்போக்கில் உருவான புராணக் கதைகளும், வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த செவிவழிக் கதைகளுமே அன்றி, இதற்கெனச் சான்றுகள் ஏதும் இல்லை.
மேலும், பேச்சியம்மன் வழிபாடு என்பது காளி வழிபாட்டின் அங்கம் என்பதும் தவறான புரிதலாகும். பேச்சியம்மன் என்பது காளியின் வடிவம் அல்ல; அது பண்டைய தமிழ் மரபில் உருவான தனித்துவமான தமிழ்த் தெய்வம்!
நமது கடமை:
பிற்காலத்தில் ஏற்றிச் சொல்லப்பட்ட பயங்கரமான உருவ அமைப்புகளையும் கற்பனைக் கதைகளையும் கடந்து, நமது தமிழ் மண்ணின் உண்மையான வழிபாட்டு முறைகளையும் அதன் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகளையும் மீட்டெடுப்பதே நமது கடமை.
இப்பதிவு குறித்த உங்கள் மேலான கருத்துக்களைக் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்!
M.Porkodi Nangai 🌿
Tamil writer & Author

Comments
Post a Comment