நறுந்தமிழ் வணக்கங்கள்! 🙏🏻
சைவ சித்தாந்தத்தின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றான சிவஞான சித்தியாரில் இருந்து, இறைவன் எங்கும் நிறைந்து அருள் செய்யும் தன்மையை விளக்கும் ஒரு அருமையான பாடல் மற்றும் அதன் விளக்கம்:
பாடல்:
யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்
மற்ற தெய்வங்கள் வேதனைப்படும்
பிறக்கும் இறக்கும் மேற்
வினையுஞ் செய்யும்
ஆதலால் அவையிலாதான்
அறிந்து அருள் செய்வ னன்றே!!
— சிவஞான சித்தியார்
பாடலின் எளிய விளக்கம்:
கடவுள் என நினைத்து நீங்கள் யாரை வணங்கினாலும் சரி... அது பெருமாளோ, முருகனோ, பிள்ளையாரோ, காளியோ — இப்படி யாராக இருந்தாலும்,
அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் அருள் வழங்குகிறார்களோ இல்லையோ...
உங்களின் உண்மையான நம்பிக்கையை வீண்போகாமல், அந்தந்த தெய்வத்தின் உருவிலேயே அம்மையை பாதி பாகத்தில் கொண்ட சிவபெருமான் தான் வந்து அருள் புரிகிறார்.
ஏனைய தெய்வங்களெல்லாம் தோன்றும், மறையும்; பிறப்பு, இறப்பு மற்றும் வேதனைப்படும் இயல்புடையவை. இதற்கெல்லாம் மேலாக அவை வினையையும் செய்யும்.
ஆனால், மேற்கண்ட எந்தக் பண்புகளுமே இல்லாதவன், இதற்கு அப்பாற்பட்டவன், வினைகள் சாராதவன் சிவபெருமான் ஒருவனே!
அவனே அனைத்தையும் அறிந்து, அனைத்து உருவிலும் தான் ஒருவனாகவே நின்று அனைவருக்கும் அருள் செய்பவன்.
திருச்சிற்றம்பலம் 🙏🏻
M.Porkodi Nangai
Tamil writer & Author

Comments
Post a Comment