Skip to main content

கடம்பவனக் கடவுளின் ஊரும்/ பேரும் மாற்றப்பட்ட வரலாறு

 #கடம்பவனம்

#சம்மட்டிபுரம்

#மருதூர்


#நான்மாடக்கூடல்

போன்ற பழம்பெருமையான தமிழ்ப்பெயர்களைக் கொண்டு ஊர் தான் தற்போதைய

#மதுரைமாநகர்


மருத மரங்கள் அடர்ந்த மருதூர் என்பதுதான் பின்னாளில் ஆரியர்களால் மதுரை என்றானது 


இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானோ முன்னைப் பழம்பொருள். 

அதாவது கடம்பவன நாதர் என்ற சொக்கநாதப் பெருமான் என்பவர் தான் காடுகளடர்ந்த இவ்வூரில் குடி புகுந்தவர்; தனித்ததோர் தெய்வம்; 


இந்த கடம்பவன நாதாரால் தான் ஊரும்/ பேரும் உருவாயிற்று..

அப்பொழுது அம்மன் என்பதே இல்லை 

எனவே இது 

#சொக்கநாதப் பெருமான் கோயில் மட்டும் தான் 

பின்னர் அங்கற்கண்ணி என்ற அம்மன் வழிபாடு எப்பொழுது திணிக்கப்பட்டது?

தனிப் பெரும் சைவ நாடான கடம்பவன மருதூரில் 

அம்மன் வழிபாடு 

நாயக்கர்கள் மதுரையை கைப்பற்றிய போது அவர்களால் 

கொண்டவரப்பட்ட இடைக்கால வழிபாட்டு முறையாகும்‌.


கி.பி. 16 - 17-ஆம் நூற்றாண்டு): நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்தான், குறிப்பாக திருமலை நாயக்கர் காலத்தில், மதுரையில் அம்மன் வழிபாடு பெருமளவில் முன்னிறுத்தப்பட்டது. சிவபெருமானுக்கு நிகராக அல்லது அவரை விடவும் "மீனாட்சி அம்மன்" என்ற பெயரும், அம்மனுக்கு முதல் மரியாதை அளிக்கும் வழிபாட்டு முறையும் இடைக்காலத்தின் இறுதியிலும் 

நாயக்கர் காலத்திலும்தான் முழு வடிவம் பெற்றது.

இவ்வங்கயற்கண்ணி எனும் பெயரே மீனாட்சி என்பதன் தமிழாக்கமேயன்றி 

தனிப் பெயரல்ல.

சிவனாரின் ஒரு பாதி அம்மன் வடிவம் என்பதாகத்தான் தேவாரம் போன்ற சைவப்பாடல்களில்

 #மங்கைபங்கினர் போன்ற வார்த்தைகளை சைவ அடியார்கள் பாடினரேயொழிய 

ஒரு சைவ நாட்டில் சிவனாரை விட அம்மனுக்கு பரிவட்டம் முதன்மரியாதை என்பதெல்லாம் அதீதமாக முன்னிறுத்தப்பட்டது நாயக்கர்களால் தான்!

( ஏனெனில் அவர்களுக்கு சைவ வழிபாடு என்பதும்; சைவ அடியார்கள் என்பதும்; திருமுறைகள் என்பதும் என்னவென்றே தெரியாது)


ஆனால் இன்றோ குடமுழுக்கு நடைப்பெறப் போகும் 

சொக்கர் கோயிலில் 

மீனாட்சி என்ற வடமொழிச் சொலலும் சுந்தரேஸ்வரர் என்ற வடமொழிச் சொல்லும் ஆதிக்கம் பெற்று தமிழே உருவான 

சொக்கநாதப் பெருமானின் அழிக்கப்பட்டு விட்டது என்பது மிகுந்த வேதனைக்குரியது



இந்த கடம்பவன நாதர் தான் இவ்வூர் உருவாவதற்கும் இன்று அனைவரும் மதுரை மதுரை என்று பெருமையடிப்பதற்கும் 

மீனாட்சி என்ற பெயரை முன்னிறுத்தி பணம் சம்பாதிப்பதற்கு ம் மூல காரணர் ஆவார்.


ஆனால் அவரை பின்னுக்குத்தள்ளி 

அந்தத் தான்தோன்றிப் பெருமானான கடம்வனநாதரின் உண்மைத் தன்மையை வலுக்கட்டாயமாக மறைக்கின்றனர் பலர்.


சொக்கநாதப் பெருமானின் திருமணத்தின் போது கூட 

#தடாதகைப்பிராட்டியார் எனும் கடம்பவனத்தின் பழமையான பெண் தெய்வத்திற்கு தான் சொக்கர் மங்கல நாண் ( தாலி)

அணிவிப்பாரெயொழிய 

திருமணம் 

மீனாட்சிக்கும் சொக்கருக்குமல்ல.


மேலும் ஆலவாய் அண்ணல் தமிழினாலானவன்/ 


தமிழ்த் திருமுறைகளை செவிகளில் கேட்டு இன்புறுபவன் 

தொண்டர்களோடு கூட்டுக்கண்ட சிவபெருமானை தமிழ்நாட்டைத் தவிர வேறு எம்மாநிலத்திலும் எவ்வூரிலும் காணமுடியாது ‌


அப்படிப்பட்ட அடியார்களை முன்னிறுத்தும் சிவனார் அடியார்கள் அன்பினால் பாடிய திருமுறைகளைத் தானே கேட்டு மகிழ்வார் 

எவ்விதம் வேற்று மொழியினை ஏற்றுக் கொள்வார்?

அடியார்கள் ஓதிய திருமுறைகள் சிவபெருமான் மீதுள்ள அன்பினால் அமைந்தது 

வடமொழி வேதம் என்பது ஆதிக்கத்தினால் விதிகளாலும் ( pronounciation rules)அமையப் பெற்றது 



இறைவனுக்கு அன்பு ஏற்குமா? ஆதிக்கம் ஏறபுடையதா?


எல்லையற்ற பரந்துவிரிந்தகடவுள் என்பவன் விதிகளுக்கும் ஆதிக்கவாதிகளின் மொழிகளுக்கு கட்டுப்பட்டவனா?


நடைபெறவிருக்கும் சொக்கநாதப் பெருமான் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் இறைவனுக்கு தமிழ்ப் பெயரும் இல்லை 


அவருக்கு பிடித்தமான ஓதும் மொழி தமிழிலும் இல்லை 


இங்கு எவரும் இறைவனுக்காக இறைவனை வழிபடுவதில்லை


தனக்காக இறைவனை வழிபடுகின்றனர் 

வழிபாட்டு முறையை உருவாக்குகின்றனர் 


ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்தாய் திருமுறைகள் ஓதப்பட வேண்டும்/ தமிழில் மந்திரங்கள் முழங்க வேண்டும் என்று போராடிக் கொண்டு தான் இருக்கிறாள் 


ஆனால் என்ன செய்வது? ஆதிக்கம் செலுத்தும் இழிநிலை பெற்றவளல்ல/ 


அன்பினால் 

அடையத் தக்கவள் தமிழன்னை 

அன்பும் அறமும் மெதுவாகத்தான் வெல்லும் 


திருச்சிற்றம்பலம் 🙏🏻


M.Porkodi Nangai

Tamil writer & Author 


Kadambavanam, MaduraiHistory, Chokkanathar, MeenakshiAmmanTemple, TamilLiterature, மதுரைவரலாறு, சொக்கநாதர்

Comments

Popular posts from this blog

வீட்டுக்கு வந்த திரையரங்கம்: VCR டெக் வரலாறு முதல் ஏக்நாத் வீடியோ வரை!

 நாள்: 24 ஆகஸ்ட் 2026 (திங்கள்) நேரம்: இரவு 10:30 PM இன்றைக்கு கையடக்கச் செல்போன் திரையில் சொடக்கு போடும் நேரத்தில் சினிமா பார்க்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், 80-களிலும் 90-களிலும் 'விசிஆர் டெக்' (VCR Deck) வாடகைக்கு எடுத்து வந்து, வீட்டில் திரைகட்டி, ஊரே ஒன்று கூடிப் படம் பார்த்த அனுபவம் ஒரு மறக்க முடியாத வசந்த காலம். அந்த டெக் தொழில்நுட்பம் எங்கு பிறந்த கதை தெரியுமா? டெக் பிறந்த வரலாறு (1969 - 1976) வீடுகளுக்கான வீடியோ டெக் தொழில்நுட்பத்திற்கு முதன்முதலில் வித்திட்டது ஐரோப்பாவைச் சேர்ந்த பிலிப்ஸ் (Philips) நிறுவனம் தான். 1969-ஆம் ஆண்டு பிலிப்ஸ் நிறுவனம் தான் 'VCR' எனும் முதல் வீட்டு வீடியோ வடிவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர், ஜப்பானைச் சேர்ந்த சோனி (Sony) நிறுவனம் 1975-இல் 'பீட்டாமாக்ஸ்' (Betamax) எனும் டெக்குகளைக் கொண்டு வந்தது. ஆனால், 1976-இல் ஜப்பானின் ஜே.வி.சி (JVC) நிறுவனம் அறிமுகப்படுத்திய 'விஹெச்எஸ்' (VHS - Video Home System) எனும் கேசட் வடிவம்தான் உலக அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, அனைவரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்தது. இந்...

கில்லட்டின் மெஷின்: ரஷ்யன் கதையும்.. பிரெஞ்சு புரட்சியின் உண்மை வரலாறும்! 🧐😮

நம்மில் பலருக்கு பள்ளிப் பாடப்புத்தகங்களில் படித்த ஒரு கதை நினைவிருக்கலாம். ஒரு கொடூரமான அதிபர் அல்லது அரசன், தன் நாட்டில் 60 வயதைக் கடந்த முதியவர்கள் எல்லாரையும் 'கில்லட்டின் மெஷின்' (Guillotine Machine) கொண்டு தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிடுவான். இறுதியாக ஒரு வயதான தாயின் புத்திசாலித்தனத்தால் அந்த சட்டம் ரத்து செய்யப்படும். நம்மில் பலர் இது ரஷ்யாவில் நடந்த  வரலாற்று நிகழ்வு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல! இந்தக் கட்டுரையில், அந்த அருமையான கதையின் பின்னணியையும், உலகையே நடுங்க வைத்த 'கில்லட்டின்' இயந்திரத்தின் நிஜமான பிரெஞ்சு வரலாற்றையும் விரிவாகப் பார்ப்போம்.   முதியவர்களின் தலையை வெட்டும் கதை: உண்மைமா? கற்பனையா? 👴👵 முதலில் நாம் சிறு வயதில் பாடப்புத்தகத்தில் படித்த அந்த அதிபர் கதையைத் தெரிந்து கொள்வோம்.  அது ரஷ்யாவில் நடந்த உண்மை நிகழ்வல்ல. அது உலகப் புகழ்பெற்ற  "தி ஏஜ்டு மதர்" (The Aged Mother) என்ற ஒரு ஜப்பானிய நாட்டுப்புறக் கதையாகும் (Japanese Folktale). முதியவர்களின் அனுபவ அறிவை இளைஞர்கள் மதிக்க வேண்டும், வயதானவர்கள் நாட்டுக்கு ப...

இந்தியாவிற்கே முதல் விடுதலைப் போராட்ட வீரன்: சிப்பாய் கலகத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை அலறவைத்த கான்சாஹிப் மருதநாயகம்!

  வெள்ளையர் ஆட்சியில் மதுரையின் ஆளுநரான ஒரே தமிழன்! ஆங்கிலேயர்களால் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதியின் ஆளுநராக (Governor) நியமிக்கப்பட்ட ஒரே தமிழன் மருதநாயகம் மட்டுமே! தளபதியிலிருந்து சுதந்திரப் போராளியாக: கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்த வீரம்! மதுரை நகரோடு நிலைத்த பெயர்: தளவாய் அக்ரகாரமும் கான்சாமேட்டு தெருவும்! போர்க்களத்தில் வெல்ல முடியாமல் சதியால் கைதான சோகம்! தூக்கிலிட்ட பிறகும் அஞ்சிய ஆங்கிலேயர்: உடலைத் துண்டு துண்டாக வீசிய வன்ம ம்!   இந்திய நாட்டின் விடுதலை நாளில், தென்னகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை முதன்முதலாக உலுக்கி எடுத்த மாவீரர் கான்சாஹிப் மருதநாயகம் பிள்ளையை நினைவுகூர்வது நமக்குக் பெருமையளிப்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்த இவர், தன் வாழ்வின் தொடக்கத்தில் பிரெஞ்சுப் படைகளிலும், பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையிலும் சுபேதாராகப் பணியாற்றினார். போர்க்களத்தில் இவரது ஒப்பற்ற வீரத்தையும், நுட்பமான போர்த்தந்திரங்களையும் கண்ட ஆங்கிலேயர்கள், இவருக்கு 'கான்சாஹிப்' என்ற உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி...