Skip to main content

சதுக்க பூதங்கள்

 நற்றமிழ் வணக்கம் 🙏🏻 


சதுக்க பூதங்கள் என்பவை பண்டைய தமிழ்நாட்டில் அறத்தைக் காக்கும் காவல் தெய்வங்களாக வணங்கப்பட்ட பூதங்கள் 

இந்த சதுக்க பூதங்களின்  இருப்பிடங்களாக இருந்தவை

விசாலமான வீதிகளும் 

நாற்சந்திகள் கூடும் இடங்களுமேயாம்.


அறம் பிறழ்ந்து நடப்போரை அந்த பூதங்கள் அவ்வப்போதே அவ்விடத்திலேயே தண்டித்து விடும்.


பொய்யான துறவிகள், 

பிறருக்கு தீங்கிழைத்தோர், பிறன் மனைவியைக் கவர்ந்தோர், 

சூதாட்டத்தில் ஈடுபடுவோர், 

அடுத்தவர்களின் பொருளைக் கொள்ளையடிப்போர், 

பொய் சாட்சி சொல்லுவோர் 

பெண்களை துன்புறுத்துவோர்

 இவர்கள்தான் அறம்பிழந்து நடப்பவர்கள், அதாவது தர்மத்திற்கு, சத்தியத்திற்கு புறம்பாக நடப்பவர்கள்.


இப்படிப்பட்டோரை அந்த இடத்திலேயே பூதங்கள் கொன்று விடும்.

( Spot punishment )

ஒவ்வொரு நாற்சந்தியிலும் இந்த பூதங்கள் காணப்படும், மக்களை கண்காணித்துக் கொண்டேயிருக்கும்.


இந்த பூதங்களைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம்பெற்றுள்ளன.


சிலப்பதிகாரத்தில் 


கோவலனும் கண்ணகியும் புகார் நகரத்தில் வாழ்ந்தபோது ,

ஒரு பத்தினிப் பெண்ணைப் பற்றி அவளின் கணவனிடம் தீயவன் ஒருவன் தவறாகப் பேசிவிடுவான். அதை உண்மையென நம்பிய அப்பெண்ணின் கணவனும் அவளை மிகவும் துன்புறுத்துவான். இதைக் கண்ட பூதம் இவள் மேல் யாதொரு தவறுமில்லை, ஆனால் யாரோ ஒருவன் பேச்சைக் கேட்டு இவ்விதம் நடந்து கொள்கிறாயே,? நானும் இதேபோல உன்னைத் துன்புறுத்திக் கொல்லுவேன் என்று அப்பெண்ணின் கணவனை பூதம் சித்ரவதை செய்தது, இதைக் கண்ட அவனின் தாயார் என் மகனை விட்டுவிடு என்று பூதத்திடம் கெஞ்சினாள்.

அப்போது அவ்வழியே சென்ற கோவலன் அந்த தாயின் கதறலைக் கண்டு பொறாதவனாய் பூதத்திடம்

அவனுக்கு பதிலாக என்னுயிரை எடுத்துக் கொண்டு அவனை விட்டு விடு எனக் கேட்டான்.


அதற்கு அந்த சதுக்க பூதம் 



* நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி யிழக்கும்

பண்பீங்கில்லை ஒழிக நின் கருத்து

*என்று கூறி மறுத்து விட்டது.


அதாவது கெட்டவனுடைய நரகத்திற்கு போகக்கூடியவனுடைய உயிருக்கு பதிலாக 

கோவலனே!! தூய்மையானவனாகிய உன்னுயிரை எடுத்துக் கொண்டால், அறவழியில் நடக்கும் சதுக்க பூதமாகிய எனக்கு பரகதி( மோட்சம்)

இழந்து போய்விடும். கெட்டவனுக்கு பதிலாக நல்லவனுடைய உயிரை எடுக்கும் பண்பு எங்களுடையதல்ல என்று கூறியது.


 உடனே கோவலனை அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பணித்து, 

பின்னர் அவனை தண்டித்து.


அதேபோல மணிமேகலை காப்பியத்திலும் சதுக்க பூதங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 


காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி,பார்ப்பினி பெண் ஒருத்தியை தவறான கண்ணோட்டத்தில் ஒருவன் பார்த்ததற்காக அப்பெண் சதுக்க பூதத்திடம் சென்று முறையிடுகிறாள்,


அதற்கு அப்பூதம் பொய்க்கதைகளை கேட்டுக் கொண்டும், விழாக்களில்

( கேளிக்கைகளில்) அதிகமாக ஈடுபட்டு கொண்டுமிருந்ததால்தான் ஒருவன் உன்னைத் தவறாக பார்க்கும்படி நேர்ந்தது. அவற்றையெல்லாம் தவிர்த்து அறவழியில் நடந்து கொள்வாயாக!!

என்று அறிவுரை கூறி அனுப்பியது காஞ்சிநகர் பூதம்.


புலிக்கணம் போன்ற வீரர்கள் தங்கள் மன்னன் போரில் வெற்றி கொள்ளும் பொருட்டு மிகுந்த ஆரவாரத்துடன் சதுக்க பூதத்திற்கு பலி கொடுத்த செய்தியினை 

அப்பூதம் வெற்றி தரும் தெய்வமாகவும் கொண்டாடப்பட்டது என்பதை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உரைக்கின்றன.


சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்திலும் 

பழந்தமிழ் பதிற்றுப் பத்து நூலின் ஒன்பதாம் பத்தியிலும் ( stanza)

இளஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் சதுக்க பூதத்தை வழிபட்டதாக சான்று கூறுகிறது.


இந்த பூதம் புகார் நகரம் மட்டுமின்றி 

காஞ்சி, சேரநாட்டின் தலைநகரான வஞ்சியிலும் காணப்பட்டது.


நீதி தெய்வமாக விளங்கிய இப்பூதம் இப்போது தமிழ்நாட்டில் எங்கும் காணப்படுவதில்லை.


ஏனெனில் கலி முற்றி எங்கும் அதர்மமே நடக்கும் போது அறவழி தெய்வமான பூதங்கள் சிவபெருமானின் ஆணைக்கிணங்க தங்களை மறைத்துக் கொண்டன.

ஆனாலும் காவல் தெய்வங்களாக தற்போது அவை விளங்குகின்றன என்று சிலர் கூறுவதும் உண்டு.


M.Porkodi Nangai 

Tamil writer & Author 


Comments

Popular posts from this blog

வீட்டுக்கு வந்த திரையரங்கம்: VCR டெக் வரலாறு முதல் ஏக்நாத் வீடியோ வரை!

 நாள்: 24 ஆகஸ்ட் 2026 (திங்கள்) நேரம்: இரவு 10:30 PM இன்றைக்கு கையடக்கச் செல்போன் திரையில் சொடக்கு போடும் நேரத்தில் சினிமா பார்க்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், 80-களிலும் 90-களிலும் 'விசிஆர் டெக்' (VCR Deck) வாடகைக்கு எடுத்து வந்து, வீட்டில் திரைகட்டி, ஊரே ஒன்று கூடிப் படம் பார்த்த அனுபவம் ஒரு மறக்க முடியாத வசந்த காலம். அந்த டெக் தொழில்நுட்பம் எங்கு பிறந்த கதை தெரியுமா? டெக் பிறந்த வரலாறு (1969 - 1976) வீடுகளுக்கான வீடியோ டெக் தொழில்நுட்பத்திற்கு முதன்முதலில் வித்திட்டது ஐரோப்பாவைச் சேர்ந்த பிலிப்ஸ் (Philips) நிறுவனம் தான். 1969-ஆம் ஆண்டு பிலிப்ஸ் நிறுவனம் தான் 'VCR' எனும் முதல் வீட்டு வீடியோ வடிவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர், ஜப்பானைச் சேர்ந்த சோனி (Sony) நிறுவனம் 1975-இல் 'பீட்டாமாக்ஸ்' (Betamax) எனும் டெக்குகளைக் கொண்டு வந்தது. ஆனால், 1976-இல் ஜப்பானின் ஜே.வி.சி (JVC) நிறுவனம் அறிமுகப்படுத்திய 'விஹெச்எஸ்' (VHS - Video Home System) எனும் கேசட் வடிவம்தான் உலக அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, அனைவரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்தது. இந்...

கில்லட்டின் மெஷின்: ரஷ்யன் கதையும்.. பிரெஞ்சு புரட்சியின் உண்மை வரலாறும்! 🧐😮

நம்மில் பலருக்கு பள்ளிப் பாடப்புத்தகங்களில் படித்த ஒரு கதை நினைவிருக்கலாம். ஒரு கொடூரமான அதிபர் அல்லது அரசன், தன் நாட்டில் 60 வயதைக் கடந்த முதியவர்கள் எல்லாரையும் 'கில்லட்டின் மெஷின்' (Guillotine Machine) கொண்டு தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிடுவான். இறுதியாக ஒரு வயதான தாயின் புத்திசாலித்தனத்தால் அந்த சட்டம் ரத்து செய்யப்படும். நம்மில் பலர் இது ரஷ்யாவில் நடந்த  வரலாற்று நிகழ்வு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல! இந்தக் கட்டுரையில், அந்த அருமையான கதையின் பின்னணியையும், உலகையே நடுங்க வைத்த 'கில்லட்டின்' இயந்திரத்தின் நிஜமான பிரெஞ்சு வரலாற்றையும் விரிவாகப் பார்ப்போம்.   முதியவர்களின் தலையை வெட்டும் கதை: உண்மைமா? கற்பனையா? 👴👵 முதலில் நாம் சிறு வயதில் பாடப்புத்தகத்தில் படித்த அந்த அதிபர் கதையைத் தெரிந்து கொள்வோம்.  அது ரஷ்யாவில் நடந்த உண்மை நிகழ்வல்ல. அது உலகப் புகழ்பெற்ற  "தி ஏஜ்டு மதர்" (The Aged Mother) என்ற ஒரு ஜப்பானிய நாட்டுப்புறக் கதையாகும் (Japanese Folktale). முதியவர்களின் அனுபவ அறிவை இளைஞர்கள் மதிக்க வேண்டும், வயதானவர்கள் நாட்டுக்கு ப...

இந்தியாவிற்கே முதல் விடுதலைப் போராட்ட வீரன்: சிப்பாய் கலகத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை அலறவைத்த கான்சாஹிப் மருதநாயகம்!

  வெள்ளையர் ஆட்சியில் மதுரையின் ஆளுநரான ஒரே தமிழன்! ஆங்கிலேயர்களால் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதியின் ஆளுநராக (Governor) நியமிக்கப்பட்ட ஒரே தமிழன் மருதநாயகம் மட்டுமே! தளபதியிலிருந்து சுதந்திரப் போராளியாக: கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்த வீரம்! மதுரை நகரோடு நிலைத்த பெயர்: தளவாய் அக்ரகாரமும் கான்சாமேட்டு தெருவும்! போர்க்களத்தில் வெல்ல முடியாமல் சதியால் கைதான சோகம்! தூக்கிலிட்ட பிறகும் அஞ்சிய ஆங்கிலேயர்: உடலைத் துண்டு துண்டாக வீசிய வன்ம ம்!   இந்திய நாட்டின் விடுதலை நாளில், தென்னகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை முதன்முதலாக உலுக்கி எடுத்த மாவீரர் கான்சாஹிப் மருதநாயகம் பிள்ளையை நினைவுகூர்வது நமக்குக் பெருமையளிப்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்த இவர், தன் வாழ்வின் தொடக்கத்தில் பிரெஞ்சுப் படைகளிலும், பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையிலும் சுபேதாராகப் பணியாற்றினார். போர்க்களத்தில் இவரது ஒப்பற்ற வீரத்தையும், நுட்பமான போர்த்தந்திரங்களையும் கண்ட ஆங்கிலேயர்கள், இவருக்கு 'கான்சாஹிப்' என்ற உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி...