Skip to main content

தேரைத் தாங்கும் அச்சாணி: தமிழர்களின் வாழ்வியல் மெய்ம்மையும் உலக வரலாறும்!

வியாழக்கிழமை 10.32PM

Decorated South Indian temple chariot with large wooden wheels and axles for festival procession

மனித நாகரிகத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எதுவென்று கேட்டால், உலக அறிஞர்கள் ஒருமித்த குரலில் சொல்வது 'ஆழி' (அல்லது உருளை). ஆனால், அந்த மாபெரும் ஆழி எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும், அது அச்சிலிருந்து கழன்று விழுந்துவிடாமல் ஒரு தடுப்புச் சுவராக நின்று ஒட்டுமொத்த வண்டியையும் தாங்கிப் பிடிப்பது ஒரு சிறிய ஆணிதான். அதன் பெயர் அச்சாணி (கடையாணி).

உலக நாடுகள் பலவும் அச்சாணியை வெறும் ஒரு இரும்புத் துண்டாக, பொறியின் ஒரு பகுதியாக மட்டுமே பார்த்தன. ஆனால், நம் தமிழ் மரபும், முன்னோர்களும் மட்டும்தான் அந்தச் சிறிய அச்சாணியை ஒரு மாபெரும் வாழ்வியல் கலையாகவும், மிக உயர்ந்த மெய்ம்மைக் கோட்பாடாகவும் மாற்றிக் கொண்டாடினார்கள்.

இக்கட்டுரையில், அச்சாணியின் பின்னால் இருக்கும் உலக வரலாறு, நவீன தொழில்நுட்ப அறிவியல் மற்றும் தமிழ் இலக்கியங்கள் போற்றும் அதன் உன்னதம் குறித்து விரிவாகக் காண்போம்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய அச்சாணி வரலாறு

அச்சாணி என்பது ஏதோ நேற்று இன்று வந்ததல்ல. மனிதன் எப்போது உருளையையும் தேரையும் பயன்படுத்தத் தொடங்கினானோ, அப்போதே அச்சாணியும் பிறந்துவிட்டது. அதற்கு மிகச்சிறந்த சான்றுதான் பெல்ஜியம் நாட்டிலுள்ள கெம்மல்பெர்க் (Kemmelberg) என்ற இடத்தில் நில அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய வரலாற்றுக் கருவூலம்.

Ancient Celtic linchpin with bronze crescent plaque historical artifact

சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக்கால "செல்டிக் பண்பாட்டின்" (Celtic Linchpin) அசல் போர்த்தேர் அச்சாணி அது. வடிவத்தில் பிறை நிலா போன்ற வெண்கல அணிகலத் தட்டோடு (Bronze Crescent Plaque) மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அந்த அச்சாணி, அன்றைய உலகப் பண்பாடுகளின் போர்த்தேர் நுட்பத்திற்கு ஒரு மௌன சாட்சியாக இன்றும் திகழ்கிறது.

அச்சாணி என்றால் என்ன? (பொறியியல் விளக்கம்)

மாட்டு வண்டி, குதிரை வண்டி அல்லது மிகப் பெருங் கோவில் தேர்களில் ஆழியின் (சக்கரத்தின்) நடுப்பகுதி ஒரு நீண்ட மர அல்லது இரும்புத் தண்டிக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த நீண்ட தண்டுக்கு 'அச்சு' (Axle) என்று பெயர்.

Traditional wooden chariot wheel axle hub with iron linchpin

வண்டி ஓடும்போது அல்லது சுழலும் போது ஏற்படும் பக்கவாட்டு விசை காரணமாக ஆழி வெளியில் தள்ளப் பார்க்கும். அப்படி ஆழி அச்சிலிருந்து கழன்று வெளியே விழுந்துவிடாமல் இருப்பதற்காக, அச்சின் நுனியில் செங்குத்தாகச் சொருகப்படும் ஒரு சிறிய ஆணிதான் அச்சாணி அல்லது கடையாணி எனப்படும்.

இயற்கை இயல் மற்றும் நெம்புகோல் கோட்பாட்டின்படி, வண்டியின் ஒட்டுமொத்த எடையும் விசையும் ஆழியின் 
( சக்கரத்தின்)நடு அச்சைத் தாக்கும் போது, இந்தச் சிறிய அச்சாணிதான் ஒரு பலமான அரணாக நின்று வண்டியை நிலைநிறுத்துகிறது. அச்சாணி மட்டும் இல்லை என்றால், ஆழி உடனே விலகி, வண்டியே அடியோடு கவிழ்ந்துவிடும். இதனால்தான் "அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது" என்ற பழமொழி பிறந்தது.

நவீன காலத்தில் உழவு வண்டிகளில் 'அச்சாணி'

Modern tractor three point hitch ring self locking linchpin

காலம் மாறி, மாட்டு வண்டிகள் குறைந்தாலும் அச்சாணியின் அறிவியல் கோட்பாடு மாறவே இல்லை. இன்று நவீன உழவுத் தொழிலின் உயிர்நாடியாக இருக்கும் உழவு வண்டிகளில் (டிராக்டர்களில்) அச்சாணி (Self-locking Linchpin) ஒரு மிக அத்தியாவசியமான பாதுகாப்பு கருவியாகப் பயன்படுகிறது.


உழவு வண்டியின் பின்புறத்தில் கலப்பை, நிலம் நுண்மையாக்கும் கருவிகள் போன்றவற்றை இணைக்கும் மூன்று புள்ளி இணைப்புகளில் (Three-Point Hitch) இந்தக் கடையாணிகளே முதன்மையான பாதுகாப்பு அரணாக இருக்கின்றன. நிலத்தை உழும்போது ஏற்படும் கடுமையான குலுக்கல்களிலும், அதிர்வுகளிலும் கலப்பை கழன்றுவிடாமல் இறுக்கமாகப் பூட்டிக் கொள்ளும் ஸ்பிரிங் வளையத்துடன் கூடிய நவீன அச்சாணிகள் இன்றும் உழவுத் தொழிலைத் தாங்கிப் பிடிக்கின்றன!

தமிழ் இலக்கியங்கள் போற்றும் 'அச்சாணி'

திருக்குறள் (குறள் 667):
"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து."


உழவும் உலக அச்சாணியும் (குறள் 1032):

அதுமட்டுமன்றி, உழவுத் தொழிலின் சிறப்பைப் பாடும் போதும் வள்ளுவர் அச்சாணியையே உவமையாக்குகிறார்:
"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து."
பொருள்: உழவு செய்யாமல் மற்ற தொழில்களைச் செய்து வாழ்பவர்களையும் தாங்கி நிற்பதால், உழவு செய்வோரே இந்த உலகத்திற்கு அச்சாணி போன்றவராவர்.
ஒரு மாபெரும் தேர் ஓடுவதற்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒட்டுமொத்த உலகமும் இயங்குவதற்கு உழவர்களே அச்சாணியாகத் திகழ்கிறார்கள் என்பதை வள்ளுவம் மிக அழகாக உணர்த்துகிறது.


அச்சாணி என்பது வெறும் ஒரு இரும்புத் துண்டோ அல்லது மரத்துண்டோ அல்ல. அது வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் தன் கடமையில், உறுதியில்  சாலச் சிறந்தது. 

ஒரு குடும்பமாக இருந்தாலும், ஒரு மாபெரும் சமுதாயமாக இருந்தாலும், கொள்கை வழுவாத நேர்மையான தலைவர்களும், சிந்தனைகளும்தான் அதைத் தாங்கிப் பிடிக்கும் அச்சாணிகள்.


M.Porkodi Nangai 
 Tamil writer & Author

Comments

Popular posts from this blog

வீட்டுக்கு வந்த திரையரங்கம்: VCR டெக் வரலாறு முதல் ஏக்நாத் வீடியோ வரை!

 நாள்: 24 ஆகஸ்ட் 2026 (திங்கள்) நேரம்: இரவு 10:30 PM இன்றைக்கு கையடக்கச் செல்போன் திரையில் சொடக்கு போடும் நேரத்தில் சினிமா பார்க்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், 80-களிலும் 90-களிலும் 'விசிஆர் டெக்' (VCR Deck) வாடகைக்கு எடுத்து வந்து, வீட்டில் திரைகட்டி, ஊரே ஒன்று கூடிப் படம் பார்த்த அனுபவம் ஒரு மறக்க முடியாத வசந்த காலம். அந்த டெக் தொழில்நுட்பம் எங்கு பிறந்த கதை தெரியுமா? டெக் பிறந்த வரலாறு (1969 - 1976) வீடுகளுக்கான வீடியோ டெக் தொழில்நுட்பத்திற்கு முதன்முதலில் வித்திட்டது ஐரோப்பாவைச் சேர்ந்த பிலிப்ஸ் (Philips) நிறுவனம் தான். 1969-ஆம் ஆண்டு பிலிப்ஸ் நிறுவனம் தான் 'VCR' எனும் முதல் வீட்டு வீடியோ வடிவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர், ஜப்பானைச் சேர்ந்த சோனி (Sony) நிறுவனம் 1975-இல் 'பீட்டாமாக்ஸ்' (Betamax) எனும் டெக்குகளைக் கொண்டு வந்தது. ஆனால், 1976-இல் ஜப்பானின் ஜே.வி.சி (JVC) நிறுவனம் அறிமுகப்படுத்திய 'விஹெச்எஸ்' (VHS - Video Home System) எனும் கேசட் வடிவம்தான் உலக அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, அனைவரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்தது. இந்...

கில்லட்டின் மெஷின்: ரஷ்யன் கதையும்.. பிரெஞ்சு புரட்சியின் உண்மை வரலாறும்! 🧐😮

நம்மில் பலருக்கு பள்ளிப் பாடப்புத்தகங்களில் படித்த ஒரு கதை நினைவிருக்கலாம். ஒரு கொடூரமான அதிபர் அல்லது அரசன், தன் நாட்டில் 60 வயதைக் கடந்த முதியவர்கள் எல்லாரையும் 'கில்லட்டின் மெஷின்' (Guillotine Machine) கொண்டு தலையை வெட்டிக் கொல்ல உத்தரவிடுவான். இறுதியாக ஒரு வயதான தாயின் புத்திசாலித்தனத்தால் அந்த சட்டம் ரத்து செய்யப்படும். நம்மில் பலர் இது ரஷ்யாவில் நடந்த  வரலாற்று நிகழ்வு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல! இந்தக் கட்டுரையில், அந்த அருமையான கதையின் பின்னணியையும், உலகையே நடுங்க வைத்த 'கில்லட்டின்' இயந்திரத்தின் நிஜமான பிரெஞ்சு வரலாற்றையும் விரிவாகப் பார்ப்போம்.   முதியவர்களின் தலையை வெட்டும் கதை: உண்மைமா? கற்பனையா? 👴👵 முதலில் நாம் சிறு வயதில் பாடப்புத்தகத்தில் படித்த அந்த அதிபர் கதையைத் தெரிந்து கொள்வோம்.  அது ரஷ்யாவில் நடந்த உண்மை நிகழ்வல்ல. அது உலகப் புகழ்பெற்ற  "தி ஏஜ்டு மதர்" (The Aged Mother) என்ற ஒரு ஜப்பானிய நாட்டுப்புறக் கதையாகும் (Japanese Folktale). முதியவர்களின் அனுபவ அறிவை இளைஞர்கள் மதிக்க வேண்டும், வயதானவர்கள் நாட்டுக்கு ப...

இந்தியாவிற்கே முதல் விடுதலைப் போராட்ட வீரன்: சிப்பாய் கலகத்திற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை அலறவைத்த கான்சாஹிப் மருதநாயகம்!

  வெள்ளையர் ஆட்சியில் மதுரையின் ஆளுநரான ஒரே தமிழன்! ஆங்கிலேயர்களால் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதியின் ஆளுநராக (Governor) நியமிக்கப்பட்ட ஒரே தமிழன் மருதநாயகம் மட்டுமே! தளபதியிலிருந்து சுதந்திரப் போராளியாக: கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்த வீரம்! மதுரை நகரோடு நிலைத்த பெயர்: தளவாய் அக்ரகாரமும் கான்சாமேட்டு தெருவும்! போர்க்களத்தில் வெல்ல முடியாமல் சதியால் கைதான சோகம்! தூக்கிலிட்ட பிறகும் அஞ்சிய ஆங்கிலேயர்: உடலைத் துண்டு துண்டாக வீசிய வன்ம ம்!   இந்திய நாட்டின் விடுதலை நாளில், தென்னகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை முதன்முதலாக உலுக்கி எடுத்த மாவீரர் கான்சாஹிப் மருதநாயகம் பிள்ளையை நினைவுகூர்வது நமக்குக் பெருமையளிப்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்த இவர், தன் வாழ்வின் தொடக்கத்தில் பிரெஞ்சுப் படைகளிலும், பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையிலும் சுபேதாராகப் பணியாற்றினார். போர்க்களத்தில் இவரது ஒப்பற்ற வீரத்தையும், நுட்பமான போர்த்தந்திரங்களையும் கண்ட ஆங்கிலேயர்கள், இவருக்கு 'கான்சாஹிப்' என்ற உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி...