செப்டம்பர் 17/09/2026
வியாழக்கிழமை 04.04PM
நம் வீட்டின் சமையலறைக் குழாயைத் திறந்தவுடன் கொட்டும் தண்ணீருக்குப் பின்னால், பல்லாண்டு கால அரசியல் வரலாறும், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழனின் அதிசயத் தொழில்நுட்பமும், அதற்கிடையில் நம்முடைய முன்னோர்கள் பட்ட துயரங்களும் மறைந்திருக்கிறது என்பது ஒரு க( த)ண்ணீர் கதை.
சென்னையின் நவீன குடிநீர் வாரியத் தொடக்கம் முதல் தமிழர்களின் தொன்மையான சுடுமண் குழாய் தொழில்நுட்பம் வரை, தமிழகக் குடிநீர் வழங்கலின்
சுருக்கமான வரலாற்றுப் பயணம்.
🏺 காலப் பயணம்:
2600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த 'சுடுமண் குடிநீர் குழாய்கள்'!
இன்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் இரும்புக் குழாய்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கியவர்கள் நம் தமிழ் முன்னோர்கள் தான்.
நாம் இன்று பேசும் நவீனக் குழாய் வழங்கு முறைக்குச் சரியாக 2600 ஆண்டுகளுக்கு முன்பே, கழக காலங்களில் தமிழர்கள் நிலத்தடி குடிநீர் வழங்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
கீழடி தந்த சான்று:
சிவகங்கை மாவட்டத்தின் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்ணால் ஆன (Terracotta Pipes) நிலத்தடி குடிநீர் குழாய்களும், வடிகால் அமைப்புகளும் உலகையே வியக்க வைத்தன.
ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சுடுமண் குழாய்கள் மூலம், அன்றைய தமிழர்கள் நீர்நிலைகளில் இருந்து நகரத்தின் முக்கியப் பகுதிகளுக்குத் தூய்மையான குடிநீரைக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் காலப்போக்கில் ஏற்பட்ட போர்கள் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போயின.
விடுபட்ட இடைவெளி:
ஏன் நம் பாட்டிகள் ஆற்றுக்கும் கிணற்றுக்குமாக அலைந்தார்கள்?
கீழடி காலத்திற்குப் பிறகு, நிலத்தடி குழாய் தொழில்நுட்பம் முற்றிலும் அழிந்துபோனதால், இடையில் இருந்த பல நூற்றாண்டுகளில் எளிய மக்கள் இயற்கை நீர்நிலைகளை மட்டுமே நம்பி வாழ வேண்டியதாயிற்று.
நவீனக் குழாய்கள் அறிமுகமாவதற்கு முன்பு, நம் பாட்டியும் அவர்களுடைய முன்னோர்களும்
வாழ்நாள் முழுவதும் தண்ணீருக்கான போராட்டமாகவே இருந்தது:
மைல்கணக்கான நடைபயணம்:
ஒவ்வொரு நாளும் சமைப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் எடுக்க, சிற்றூரிலிருக்கும் பெண்கள் அதிகாலையிலேயே தூக்குப் பானைகளையும் குடங்களையும் தூக்கிக் கொண்டு மைல் கணக்கில் நடந்து ஆற்றுக்கோ அல்லது பொதுக் கிணறுகளுக்கோ செல்ல வேண்டியிருந்தது.
தலையில் சுமந்த துயரம்:
சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கனமான பித்தளைப் பானைகளையும் மண் பானைகளையும் இடுப்பிலும் தலையிலும் சுமந்து வந்தார்கள்
.சமூகப் பாகுபாடு:
அதிலும் குறிப்பாக, ஊர்ப் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதில் இருந்த சாதியக் கட்டுப்பாடுகளும், பாகுபாடுகளும் ஏழை எளிய மக்களின் குடிநீர்த் தாகத்தை இன்னும் ரணமாக்கியது.
ஒரு குடம் தண்ணீருக்காக ஒட்டுமொத்தக் குடும்பமும் தவம் கிடக்க வேண்டிய அவல நிலை அன்று இருந்தது.
🏛️ திமுக ஆட்சியில் விழுந்த விதை:
குடிநீர் வடிகால் வாரியம் (TWAD)மக்களின் இந்தத் தலைசுமைத் துயரத்தைத் துடைக்க, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் குடிநீர்க் குழாய்களைக் கொண்டு சேர்க்கும் முறையான உள்கட்டமைப்பு 1970-களின் தொடக்கத்தில்தான் வடிவம் பெற்றது.
1970 - வரலாற்றுத் தொடக்கம்: முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்தில், 1970 ஏப்ரல் 14 அன்று தமிழகக் சிற்றூர்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக 'தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியச் சட்டம்' கொண்டுவரப்பட்டது.
1971 முதல் செயல்பாடு:
1971 ஏப்ரல் மாதம் முதல் இந்த வாரியம் (TWAD Board) முழுவீச்சில் செயல்படத் தொடங்கியது.
இதற்குப் பிறகுதான், தமிழ்நாட்டின் வறட்சி மாவட்டங்களை இலக்காகக் கொண்டு, பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறுகளில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு வரும் "கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்" (Combined Water Supply Schemes) மாநிலம் முழுவதும் வேகமெடுத்தன.
சிற்றூர்த் தெருக்களில் நாம் பார்த்த பொதுக் கைக்குழாய்களும், தெருக் குழாய்களும் இந்த வாரியத்தின் மூலமே பரவலாக்கப்பட்டன.
அதன்பிறகு வந்த
திமுக அரசு மு.க.ஸ்டாலின்
ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் சுமார் 90%-க்கும் அதிகமான சிற்றூர் மற்றும் நகர்ப்புற வீடுகளுக்குத் தனிநபர் குடிநீர் குழாய் இணைப்புகள் (FHTC) நேரடியாக வழங்கப்பட்டு, இமாலய இலக்கு எட்டப்பட்டடது.
💧 பெருநகர சென்னை குடிநீர் வாரியம் (CMWSSB) -
1978சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கெனத் தனியாக ஒரு வாரியம் தேவைப்பட்டது.
இதன் விளைவாக, 1978-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (M.G.R) ஆட்சிக் காலத்தில் 'சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்' (CMWSSB - Metrowater) உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் இன்றும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கி வருகிறது.
🔚 முடிவுரை:
அன்று வாழ்ந்த மக்கள்
தங்களின் தலையில் சுமந்து வந்த தண்ணீர் குடங்களின் வழி( லி)யிலிருந்துதான்,
இன்றைய சமையலறைக்குள்ளே குழாய் வழித் தண்ணீர் வந்து சேரும் சொகுசு பிறந்துள்ளது.
1970-களில் திமுக ஆட்சியில் முறைப்படுத்தப்பட்ட நவீனக் குடிநீர் வாரிய உள்கட்டமைப்பு முதல், இன்றைய வீட்டுக்கு வீடு குழாய் இணைப்பு வரை நாம் அடைந்துள்ள வளர்ச்சி மிகப்பெரியது.
M.Porkodi Nangai
Tamil writer & Author
ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தின் தொடக்கப்புள்ளி நம்முடைய கீழடியின் சுடுமண் குழாய்களில் தான் தொடங்கியது என்பது ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ள வேண்டிய வரலாற்று உண்மை!


Comments
Post a Comment