செவ்வாய்க் கிழமை மாலை 7.05 🪔அனைவருக்கும் இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🪔 தெய்வங்களை வணங்கும்போது அவர்களை வாழ்த்தும் வகையாக எங்கு பார்த்தாலும் பலரும் முருகனுக்கு அரோகரா அண்ணாமலையானுக்கு ‘அரோகரா , அரோகரா’ என்று முழங்குகிறார்கள். இதன் வேர்ச்சொல் என்ன? இது எதற்காகச் சொல்லப்படுகிறது என்று ஆராயும்போதுதான் பல கேள்விகள் எழுகின்றன. ஒரு சொல் அல்லது முழக்கம் என்று வரும்போது, அதைக் கேட்கும்போதோ படிக்கும்போதோ இயல்பாகவும் நேரடியாகவும் ஒரு பொருள் புலப்பட வேண்டும். மொழியின் வலிமையும் தெளிவும் அந்த நேரடிப் பொருளில்தான் இருக்கிறது. அதற்கு மாறாக, ஒரு சொல்லின் ஒவ்வொரு அசைகளையும் பிரித்து, இழுத்து, பொருத்தி, "இப்படிப் பொருள் கொள்ளலாம்" என்று நாம் பொருளைத் திணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்தச் சொல்லின் பொருள் முழுமையில் தெளிவின்மை இருப்பதாகவே கொள்ள வேண்டும். ‘ அரோகரா’ என்ற முழக்கத்தைச் சொல்லாய்வுப் பார்வையில் அணுகும்போது இந்தக் கேள்வி இன்னும் கூர்மையாகிறது. ‘ அரஹரோஹரா ’ என்ற ஒலித்திரிபாகச் சொல்லப்பட்டாலும், ‘ அரவு’ (பாம்பு), ‘அரன்’, ‘கரன்’, ‘கரா’ என்றெல்லாம் பிர...
Porkodi Nangai - A Tamil Writer weaving thoughts with classical Tamil literary grace and grammatical beauty. Poetry, Stories and Essays that breathe Tamil.